தன்னுடைய இறப்பை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என ஒருவர் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த அலைன் கோக் (57) என்ற நபர் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.இவர் தன்னை கருணைக் கொலை செய்ய வேண்டும் என அந்நாட்டு பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார்.ஆனால் அரசு அதனை நிராகரித்துள்ளது.அதனைத் தொடர்ந்து உணவு, மருந்து சாப்பிடாமல் அவர் போராட்டம் நடத்தினார்.

மேலும் தன்னுடைய இறப்பை ஃபேஸ்புக் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். தன்னுடைய மரணத்தை மக்கள் எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதால் பேஸ்புக் நிறுவனத்திடம் கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் ஃபேஸ்புக் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது. எங்களின் விதிகளின்படி யாருடைய தற்கொலையையும் ஒளிபரப்பு செய்ய முடியாது என ஃபேஸ்புக் தெரிவித்துவிட்டது.

அவருடைய வீடியோவை ஃபேஸ்புக் நீக்கியுள்ளது. மேலும் அலைன் கோக்கிற்கு விளக்கம் அளித்துள்ள அந்நாட்டு அரசு உங்களை அழித்துகொள்ள நம் நாட்டு அரசின் விதி அனுமதிக்காது என தெரிவித்துள்ளது.