மறைந்த வசந்தகுமார் எம்பி யின் நினைவையொட்டி அகஸ்தீஸ்வரத்தில் மவுன ஊர்வலம் நடந்ததுகன்னியாகுமரி தொகுதி எம்பி யாக இருந்த வசந்தகுமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். நேற்று அகஸ்தீஸ்வரத்தில் நினைவு ஊர்வலம் நடந்தது. விநாயகர் கோயில் முன்பு இருந்து மவுன ஊர்வலம் தொடங்கியது.
ஊர்வலத்தில் வசந்தகுமார் மகன் வினோத்வசந்த் தலைமையில் பிரின்ஸ் எம்எல்ஏ, மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன்,திமுக ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி மற்றும் காங் கட்சியினர் கலந்து கொண்டனர்.ஊர்வலம் கீழசாலை, வழியாக சமாதி அமைந்துள்ள இடத்தை அடைந்தது.அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.