உடல்நல குறைவால் காலமான முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உருவ படத்திற்கு கன்னியாகுமரியில் பாஜகவினர் அஞ்சலி செலுத்தினர்.

காந்தி மண்டபம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ஜெகன்நாதன், தொழில்பிரிவு மாவட்டச் செயலாளர் சுபாஷ், சிவா, .முத்துசாமி, ஆர்.எஸ்.எஸ்.மண்டல தலைவர் ஜெனார்த்தனன், மகளிரணி நிர்வாகி கன்னியம்மாள், ஒன்றிய இளைஞரணி தலைவர் கிருஷ்ணன், முன்னாள் நகர பொதுச் செயலாளர் கண்ணன் கனகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.






0 Comments