குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் செல்போன் கடையில் சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்தது. அருகில் இருந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது சம்பந்தமாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் அரமன்னம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். நேற்று இவரது கடையில் இவர் செல்போன் பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்தில் சார்ஜரில் வைத்திருந்த செல்போன் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி தீ பற்றியது.
இதனால் அதிர்ந்து போன ராஜேஷ் என்ன செய்வது என தெரியாமல் சிறிது நேரம் அங்குமிங்குமாக ஓடினார். பின்னர் மின்சாரத்தை துண்டித்த அவர் கடைசியில் செல்போனில் உள்ள தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தார். பகல் நேரம் என்பதால் பெரும் பொருட்சேதம் தவிர்க்கபட்டது. இதுதொடர்பாக அவரது கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






0 Comments