தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரை, முக கவசம் ஆகியவை சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.

தக்கலை சுற்றுவட்டார பகுதிகளான அண்ணாசிலை, மார்கெட், அரண்மனை சாலை, உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கடைகளில் பணிபுரிவோருக்கும் பாதசாரிகளுக்கும் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் குமரி பாராளுமன்ற தொகுதி எம்பி வசந்தகுமார் மறைவையொட்டி அவர்களது படத்திற்கு மாலை அணிவித்துமவுன அஞ்சலி செலுத்தப்பட்டது . கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சிக்கு சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்க செயலாளர் ஜார்ஜ் பிலீஜின் தலைமை தாங்கினார்.
மாநில அமைப்பாளர் பிரபா, மகளிர் அணி சகாய பிரீத்தா, மாவட்டசெயலாளர் சுஜின், வழக்கறிஞர் அணி செயலாளர் ஜெகதேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முளகுமூடு வட்டார குருகுல முதல்வர் அருட்பணி மரிய இராஜேந்திரன் கபசுர குடிநீர் வழங்கி துவக்கி வைத்தார். பிரனேஷ் பாரத், பொதுக்குழு உறுப்பினர்கள் விக்டர் பியூஸ்லஸ், அஜில், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் முருகன் மற்றும் மனீஷ், சந்தியா ஜெயலதா உட்பட ஏராளம் பேர் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி கொண்ட கபசுர குடிநீர், முககவசம், சத்து மாத்திரை ஆகியவ வழங்கப்பட்டது.






0 Comments