நாகர்கோவிலில் இரையுமன்துறை ஊர் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில், கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலையில் இரையுமன்துறை ஊர் பொறுப்பாளர்கள் மோகன், ஜெயராஜ், சன்னி, விஜயன், ஜாண் பெஸ்டோ ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பேசிய பொறுப்பாளர்கள் இரையுமன்துறையில் போடப்பட உள்ள சாலையில் வாகனங்கள் பலப்படுத்தப்பட்ட சாலையாக அமைக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளுக்கு பின்புறம் உள்ள சானலில் நீர் அதிர்வு அலைகளால் வீடுகள் பாதிக்கப்படுகிறது. எனவே சானல்கரையோரம் பாதுகாக்கப்பட்ட உறுதியான தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை கூறினர்.






0 Comments