கன்னியாகுமரி மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 9.5 கோடி விவசாயிகள் பயன்பட்டு வருகின்றனர். 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ.2000 என்று ஆண்டுக்கு ரூ. 6000 விவசாயிகளுக்கு வழங்கப்படுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். திட்டத்தின் சிறப்பு விவசாயிகளுக்கு கிடைக்க கூடிய நிதி நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 40 லட்சம் விவசாயிகள் பயன்பட்டு வருகின்றனர். இணையதளத்தில் பதிவு செய்ய அரசு மேற்கொண்டுள்ள வழிகளை தவறுதலாக கையாண்டு அரசாங்கத்தை ஏமாற்றி சிலர் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு இந்த உதவி தொகையை பெற்று தருகின்றனர். நலிவுற்ற விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தை சிலர் குறுக்கு வழியில் மோசடி செய்து நிதியை பயன்படுத்துவது குற்றமாகும்.

இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயன்பெறுவர் பற்றிய கணக்கெடுப்பை மாநில அரசு பரிசீலனை செய்து தொகையை உரிய விவசாயிகளுக்கு கிடைக்கிறதா அல்லது மோசடி நடக்கிறதா என்று ஆராயவேண்டும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு மாநில அரசு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிரமாக ஆய்வு செய்து உண்மையான விவசாயிகளுக்கு உதவி தொகை கிடைத்திட ஆவன செய்திட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது