கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை எளிமையாக கொண்டாடினர். கேரளா மாநிலத்தின் முக்கிய பண்டிகையாக இருப்பது ஓணம் பண்டிகை . கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால் ஓணம் பண்டிகையை எளிமையாக கொண்டாடினர்.
நாகர்கோவில் வடசேரி பகுதிகளில் ஓண ஆடைகள் உடுத்தி, அத்தப்பூ கோலம் போட்டு, ஓணம் ஊஞ்சல் கட்டி சிறுவர்கள், பெரியவர்கள், மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ளவர்கள் ஓணம் பண்டிகை குடும்பத்தோடு எளிமையாக கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.