சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் ஆவணி 11ம் திருவிழா
Alif Newson -
Tuesday, September 01, 2020
சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழாவின் 11ம் திருவிழா நடந்தது .கடந்த 21 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. எட்டாம் நாளான கடந்த 28 ம்தேதி அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், மாலை அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் தலைமைபதியினுள் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
11 ம் திருவிழாவான நேற்று பணிவிடை நடந்தது. 11 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் அய்யா வைகுண்டசுவாமிக்கு சுருள் படைத்து வழிபட்டனர். தொடர்ந்து பல்லக்கு பதியினுள் வரும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பாலபிரஜாபதி அடிகளார் பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்லவடிவு, பையன் நேம்ரிஷ் முன்னிலை வகித்தனர். இரவு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடந்தது.
0 Comments