சிபிசிஐடி போலீஸ் கஸ்டடியில் 5 நாட்கள் விசாரணை முடிந்து காசியும் அவனது கூட்டாளியும் நாகர்கோவில் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இளம் பெண் டாக்டரை ஆபாச படம் எடுத்து பண மோசடி செய்தது, சிறுமி பாலீயல் பலாத்காரம் மற்றும் கட்ட பஞ்சாயத்து உட்பட 6 வழக்குகளில் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி மற்றும் அவரது நண்பர் காசி என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டது. 

சிபிசிஐடி போலீசார் காசி மற்றும் அவரது நண்பர் ஜினோ என்பவரையும் 5 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து டி.எஸ்.பி அனில் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் இருவரும் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வி.ஐ.பி மற்றும் அதிகாரிகளின் குடும்பத்தினரையும் அழைத்து விசாரிக்க முடிவு செய்தள்ளனர். தொடர்ந்து நான்காவது நாள் காசியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அப்போது அவரது தனி அறையில் மேலும் பல தடையங்கள் கிடைத்தனர். இந்த வழக்குகளில் வலைதளங்கள் சம்பந்தமாக விசாரணையை சைபர் கிரைம் போலீசார் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஐந்தாம் நாள் விசாரணை முடிந்து இருவரையும் நாகர்கோவில் முதன்மை கோர்ட் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினார்கள். 

நீதிபதி அவர்கள் இருவரையும் கொரோனா மருத்துவ சோதனைக்குப்பின் ஒப்படைக்க கூறியதைத் தொடர்ந்து இருவரையும் ஆசாரிபள்ளம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மருத்துவ சோதனை செய்து சளி மாதிரி எடுத்த பிறகு இரவு நீதிபதி வீட்டில் கொண்டு சென்று ஆஜர் படுத்தி பின்னர் நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். போலீஸ் கஸ்டடியில் மேலும் விசாரணை தேவைப்படுவதால் இது சம்பந்தமாக மீண்டும் சிபிசிஐடி போலீசார் கோர்டில் மனு செய்ய இருப்பதாகத் தெரிகிறது.