பல குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரே வாகனத்தில் பயணம் செய்வதை தவிர்த்திடுமாறு வெளியூர்களில் உள்ள உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பல இடங்களை சேர்ந்த 7 நபர்கள் வேன் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இவர்களுக்கு ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே குடும்பத்தை சேராதவர்கள் ஒரே வாகனத்தில் பயணம் செய்து வரும்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரால் உடன் வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே பல குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரே வாகனத்தில் பயணம் செய்வதை தவிர்த்திடுமாறு வெளியூரில் உள்ள உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்