கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ரோந்து பணியின்போது காரில் கடத்தப்பட்ட ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெயை சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் பறிமுதல் செய்தார். கடந்த 89 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் இரவும் பகலும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தக்கலை சரக டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆலோசனைப்படி, இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் வழிகாட்டுதலில், தக்கலை காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ் தாஸ் தலைமையிலான போலீஸ் படையினர் அழகியமண்டபம், திருவிதாங்கோடு, கோழிப்போர்விளையில் இரவு சுமார் எட்டு மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது கொழிபோர்விளை ஜங்ஷனில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி காரை போலீஸ் படை கண்டதும் நழுவிச் செல்ல துவங்கி வேகமாக ஓடியது.
இதை பார்த்த போலீசார் உஷார் அடைந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று வெள்ளி கோடு அருகே மடக்கி நிறுத்தினர். காரை நிறுத்திய டிரைவர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். காரை சோதனையிட்ட போலீசார் அதில் மண்ணெண்ணெய் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். காரில் 30 கேனில் இருந்த சுமார் 1000 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து தக்கலை காவல் நிலையம் கொண்டு வந்தனர் .பின் கைப்பற்றப்பட்ட கார் மற்றும் மண்ணெண்ணெய் போலீஸ் படையினர் நாகர்கோவில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்தனர்.






0 Comments