நாகர்கோவில் ஒருலிட்டர் பெட்ரோல் விலை ரூ.83 ஆக உயர்ந்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை தினசரி மாற்றம் செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 14 நாட்களாக விளை உயரத்தப்பட்டு வருகிறது. இதுவரை பெட்ரோல் மொத்தம் ரூ.7.65 –ம், டீசல் விலை ரூ.7.86-ம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த வேளையில் கடந்த 82 நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன் பின்னர் ஜூலை 7-ம் தேதி முதல் தொடர்ந்து விலை உயர்வு செய்யப்பட்டு வருகிறது.
தினசரி 50 காசுகள் வரை விலை உயர்த்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நேற்று நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.06 க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ரூ.82.61 க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை நேற்று ரூ.76.09 க்கு விற்பனை செய்யப்பட்டது.






0 Comments