பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆட்டோவை கயிறு கட்டி இழுக்கும் போராட்டம் நடைபெற்றது.
வட்டார குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையில் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன், போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, நிர்வாகிகள் மோகன், மீனாட்சிசுந்தரம், அஜீஸ், ராஜநாயகம், பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியவாறு சிறிது தூரம் ஆட்டோவை இழுத்து சென்றனர்.