சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடற்கரையை அழகுபடுத்தும் பணிக்காக ரூ. 9 கோடியில் சீரமைப்பு வேலைகள் நடந்து வருகிறது.
இதில் சூரிய உதயத்தை சுற்றுலா பயணிகள் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கை வசதி மற்றும் திரிவேணி சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் இறங்கி குளிப்பதற்கு வசதியாக படிக்கட்டுகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

இதில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக அமைக்கப்பட்டு வரும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஆனால் கடலில் இறங்கி குளிப்பதற்கு வசதியாக படிக்கட்டுகள் கட்டும் பணி கடல் அலையாழ தடைபட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 3 தினங்களாக கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடற்கரையில் நடந்து வரும் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.