நாகர்கோவில் அருகே மணல் கடத்திய 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 5 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது புளியடி அருகே மணல் ஏற்றி வந்த டிராக்டர்களை சோதனையிட்டதில் மணல் கடத்துவது தெரியவந்தது. உடனே மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த புளியடியைச் சேர்ந்த சாமிதாஸ், கண்ணன் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து 5 டிராக்டர்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.