கன்னியாகுமரி மாவட்ட முஸ்லீம் ஜமாத் கூட்டமைப்பின் சார்பாக கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

குளச்சல் முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்த சகோதரர் அவரது மகளின் திருமணத்திற்கு உதவி கேட்டு இருந்ததற்கு இன்றைய தினம் திருமண உதவியாக அந்த சகோதரரிடம் ரூபாய் 15,000 வழங்கப்பட்டது.
அத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் ஜமாஅத்களுக்கும் ஒரு நினைவூட்டல் செய்தியையும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் ஜமாஅத்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது .
அந்த சுற்றறிக்கையில் உங்கள் ஜமாஅத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் திருமண உதவி பெற தகுதியான நபர்களை மற்றும் கல்லூரி பயில மனம் இருந்தும் வசதியில்லாத நபர்களையும் ஒவ்வொரு ஜமாஅத்தும் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பிற்கு பரிந்துரை செய்தால் நிச்சயமாக அந்த பரிந்துரை பரிசீலனை செய்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற செய்தியினை மீண்டும் ஒரு முறை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாஅத்களுக்கும் நினைவு படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் நிறுவனத் தலைவர் இப்ராஹிம் கான், தலைவர் மீரான் மைதீன், பொதுச் செயலாளர் ஹிமாம் பாதுஷா, பொருளாளர் நசீர் உசேன், மாவட்ட துணை செயலாளர் (activities) S.R.ஹாஜிபாபு, மாநகரச் தலைவர் ஜாகிர் உசேன், மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் S.அயூப் கான், உறுப்பினர் மைதீன் ராஜிக் போன்றோர் கலந்து கொண்டனர்.






0 Comments