நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அரசின் உத்தரவை மீறி முகக் கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு சுகாதார ஆய்வாளர் ஜாண் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.






0 Comments