நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தேநீர் கடைகள், ஜூஸ் கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்தனர்.

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரோட்டோரக் கடைகள், டீ கடைகள், ஜூஸ் கடைகள், சர்பத் கடைகளில் ஒருமுறை பயன்படுத்தும் சில்வர் கோட்டிங் கப் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சில்வர் கப், கண்ணாடி கப், பீங்கான் கப், பேப்பர் கப் போன்றவைகள் பயன் படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தவுபடி நகர்நல அலுவலர் கிங்சால் தலைமையில் சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் மற்றும் அதிகாரிகள் நாகர்கோவில் கோர்ட் ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, வடசேரி, பாலமோர் ரோடு உட்பட பல பகுதிகளில் அதிரடி ஆய்வு செய்தனர். கடைகளில் பார்ஷல் கொடுத்தால் தூக்கு வாளியில் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.






0 Comments