சாத்தான்குளத்தில் தந்தை- மகன் இறந்த சம்பவத்தை கண்டித்து மார்த்தாண்டம் வர்த்தகர் சங்கம் சார்பில் நேற்று மாலை மார்த்தாண்டம் பஸ்நிலையம் முன் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் தினகர் தலைமை தாங்கினார். மாநில வணிகர் சங்கங்களின் துணை தலைவர் கருங்கல் ஜார்ஜ், குழித்துறை நகராட்சி முன்னாள் தலைவர் பொன் ஆசைதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். இதில் செயலாளர் ராஜ்பினோ, உதவி துணை செயலாளர் நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






0 Comments