தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றில் போலீசார் உள்பட உயர் அதிகாரிகள் சிக்கியுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் உரிய பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் முக்கியமான சாலை மற்றும் ஜங்சன் பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் உரிய பாதுகாப்புடன் இருக்க மாவட்ட எஸ்பி அறிவுரை கூறியுள்ளார்.
மேலும் நாகர்கோவில் போக்குவரத்து போலீசாருக்கு பேஸ் ஷீல்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் போக்குவரத்து சீர்செய்யும் பொது இந்த பேஷ் ஷீல்டை போட்டுக்கொண்டு பணியில் இருக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்று முதல் போக்குவரத்து போலீசார் பேஸ் ஷீல்டு அணிந்து கொண்டு போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.






0 Comments