தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சாத்தான்குளம் வணிகர்கள் தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சாதாரண வழக்கிற்காக காவல்நிலையம் அழைத்து சென்று அடித்து காயப்படுத்தி கோவில்பட்டி கிளை சிறைச்சாலையில் அடைத்து கொன்றுள்ளனர்.

தந்தை, மகனை அடித்து துன்புறுத்திய உதவி ஆய்வாளர்கள் இருவர், காவலர்கள் இருவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அதற்கான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர்களும் இன்று (26-06-2020) கடைகளை அடைத்து ஆதரவு தர வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தலைவர் நாகராஜன், செயலாளர் பொன்சுவாமி, பொருளாளர் நாராயணன், மாநில துணை தலைவர் ஜோசப்ராஜ், இணை செயலாளர்கள் துரைராஜ், சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






0 Comments