நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84 ஆக உயர்ந்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை தொடர்ச்சியாக உயர்த்தி வருகிறது. அந்த வகையில் 19-வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் ரூ.83.84 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ரூ 83.98 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனை போன்று நாகர்கோவிலில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 77.98 க்கு நேற்று முன்தினம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ரூ. 78.09 க்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த 19 நாட்களில் மட்டும் பெட்ரோல் ரூ.8.66-ம், டீசல் லிட்டருக்கு ரூ.10.63-ம் விலை உயர்ந்துள்ளது.