குமரி மாவட்டத்தில் நேற்று மேலும் 28 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்தூர் கடற்கரை கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்த நிலையில் உள்ளது. வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்குள் நுழைந்தவர்கள், அவர்களை சார்ந்தவர்கள்கள் மூலம் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

அரசு தரப்பில் சோதனை சாவடிகள், இ-பாஸ், தனிமைப்படுத்துதல் முகாம்கள், வவீடுகளில் தனிமைப்படுத்துதல் என்று பல்வேறு கட்டுபாடுகளை விதித்தபோதிலும், கொரோனா எந்தவித கட்டுப்பாட்டிலும் இல்லை என்ற நிலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு மூன்று கட்டமாக கொரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முடிவுகள் கண்டறியப்படுகிறது. மாவட்டத்தில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை 327 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காயல்பட்டிணத்தில் இருந்து வந்த 16 வயது ஆண், தென்தாமரைகுளம் புன்னையடியை சேர்ந்த 4 வயது சிறுவன் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், கொல்லங்கோடு மஞ்சத்தோப்பை சேர்ந்த கேரளாவில் ஆசிரியராக வேலை பார்க்கும் 35 வயது நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது 30 வயது மனைவி, ஒன்றரை வயது பெண் குழந்தை, அவரது பெற்றோர் 70 வயது ஆண், 55 வயது பெண் என ஒரே குடும்பத்தில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடற்கரை கிராமமான தூத்தூரில் 58 வயது பெண், 46 வயது ஆண், 60 வயது பெண், 16 வயது பெண், 86 வயது ஆண், 62 வயது ஆண், 74 வயது பெண், 27 வயது ஆண், 39 வயது ஆண், 55 வயது பெண், 52 வயது பெண், 80 வயது ஆண், 40 வயது ஆண் ஆகிய 14 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் கோயில்விளாகம், வட்டவிளாகம், சின்னத்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

மேலும் களியக்காவிளை சோதனை சாவடியில் சளி மாதிரி சேகரிக்கப்பட்ட ரீத்தாபுரத்தை சேர்ந்த 41 வயது ஆண், கலுங்கடி பிலாவிளையை சேர்ந்த 29 வயது பெண். பூதப்பாண்டி, சீதப்பாலை 74 வயது பெண், தூத்தூரை சேர்ந்த 63 வயது பெண், 2 வயது சிறுவன், 31 வயது பெண் ஆகியோருக்கும், கொல்லங்கோட்டை சேர்ந்த 45 வயது ஆண், நாகர்கோவில் தட்டவிளையை சேர்ந்த 21 வயது பெண் என 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 8 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.