சென்னையில் கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் பாலமுரளி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு அஞ்சுகிராமம் காவல்நிலைய போலீசார் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை மாம்பலத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் பாலமுரளி கொரோனா பாதிப்பால் இறந்தார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு மக்களுக்காக உயிர் தியாகம் செய்த இன்ஸ்பெக்டர் பாலமுரளிக்கு தமிழகம் முழுவதும் போலீசார் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாலமுரளிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுரளி உருவப்படத்திற்கு அஞ்சுகிராமம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் கபிரியேல், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் டேனியல் அருள் சேகர், மோகன், ஏட்டுகள் மணிகண்டன், லிங்கேஷ் உள்ளிட்ட போலீசார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.