வெளி மாநிலம், மாவட்டம், வெளி நாடுகளில் இருந்து வரும் மக்களை அலட்சியப்படுத்துவதை கண்டித்து காங்., கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய எம்பி, 3 எம்.எல்ஏக்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட வெளிநாடு, வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்தோர் களியக்காவிளையில் படும் கஷ்டத்தை கண்டித்து காங்., கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.எல் ஏ தலைமை வகித்தார். வசந்தகுமார் எம்.பி, உண்ணாவிரத போர்ட்டத்தை துவக்கி வைத்தார். பிரின்ஸ், விஜயதரணி எம்.எல் ஏக்கள் பேசினர். களியக்காவிளை நகர காங், தலைவர் சுரேஷ், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் முக கவசம் அணிந்து பங்கேற்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அரசு அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது.

ஆகவே போராட்டத்தில் பங்கேற்ற எம்.பி, எம்,எல்.ஏக்கள் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்து களியக்காவிளை தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனுமதி இன்றி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டுள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுருந்தனர்.