கொரோனா காலத்தில் பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில அரசு மின்சார கட்டணத்தை குறைக்க கோளாறுகளை சரி செய்திட வழிவகை செய்யவும். நாட்டில் ஏழை பணக்காரர் பாகுபாடில்லாமல் அனைவரும் இந்திய நாட்டில் சமம் என்ற கோட்பாட்டுக்கு இந்திய நாடு வர பலவித முயற்சிகளை எடுக்க வேண்டும்.

வேலை நீக்கம் சம்பள வெட்டு வேலை நேரத்தை அதிகரிக்க முயற்சிகளை தடுத்து நிறுத்த கேட்பது, கொரோனா காலத்தில் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. தக்கலை பழைய பஸ் நிலையத்தில் நடந்த போராட்டத்திற்கு நகரச் செயலாளர் வர்கீஸ் தலைமை தாங்கினார். அனிதா முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் ராஜ் போராட்டத்தை கோஷங்களிட்டு துவக்கி வைத்து விளக்கினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.






0 Comments