கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிகையாக ஊரடங்கு விடுக்கப்பட்ட நிலையில், ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.

இதனால் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு பலர் பொருள் மற்றும் நிதியுதவிகள் செய்துவந்தனர்.
இந்நிலையில் நாகர்கோவிலில் ஊரடங்கால் வேலைக்கு செல்லமுடியாமல் தவித்து வந்த நாகர்கோவில் மாநகராட்சி எஸ்.பி. ஆபீஸ் ரோடு, அரசமூடு சந்திப்பு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஒழுகினசேரி முத்து தியேட்டர் சமீபம் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோருக்கு தலா ரூ. 1000 வீதம் 46 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அக்ஷயா கண்ணன் நிதியுதவி வழங்கினார்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிதியுதவி வழங்கிய அக்ஷயா கண்ணனுக்கு நாகர்கோவில் அமமுக நிர்வாகி ஹிமாம் பாதுஷா நன்றி தெரிவித்தார்.






0 Comments