இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,97,535 லிருந்து 3,08,993ஆக உயர்வு. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,47,195 லிருந்து 1,54,330ஆக உயர்வு. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,498லிருந்து 8,884ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,01,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 47,796ஆக உயர்ந்துள்ளது; உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,717ஆக உயர்வு. மும்பை பகுதியில் மட்டும் 55ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 2,044 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரேநாளில் 90 பேர் கொரோனாவுக்கு மும்பை பகுதியில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.

வேகமெடுக்கும் கொரோனா: ஜூன் 15-ல் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை