கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் சார்பில் திருவிதாங்கோடு நடுக்கடை ஜங்ஷனில் வைத்து அனைத்து மக்களுக்கும் கொரோனோ நோய் தடுப்பு ஹோமியோபதி மருந்து மற்றும் முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி தலைவர் இப்ராஹிம் கான் பொதுச் செயலாளர் ஹிமாம் பாதுஷா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் நசீர் உசேன், மாவட்டதுணைச் செயலாளர் S.R.ஹாஜிபாபு, நாகர்கோவில் மாநகர தலைவர் ஜாகிர் உசேன் தக்கலை நகர தலைவர் செய்யதலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொரோனோ நோய் தடுப்பு மருந்தை எப்படி சாப்பிடுவது என விளக்கம் அளித்து நாகர்கோவில் மாஞ்சா குடியிருப்பு ரகுராம் சித்தா ஆயுர்வேத மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் பிரேம்குமார் பொதுமக்களுக்கு மருந்தை வழங்கி துவக்கி வைத்தார். முககவசத்தை திருவிதாங்கோடு இளைஞரணி தலைவர் பக்கா சாகுல் மற்றும் இளைஞரனி துனை செயலாளர் M. அப்சல், m.அஸ்கர் மற்றும் கிளை தலைவர் எஸ் எம் செய்யதலி ஆகியோர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் திருவை ஏ எம் முகமது சமிம் திருவிதாங்கோடு இளைஞர் அணி செயலாளர் முகம்மது ஆமிம். கிளைச் செயலாளர் அமானுத்தீன். பொருளாளர் சபிக். இளைஞரணி துணைச் செயலாளர் பீர் முகமது மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.
1000 நபர்களுக்கு தேவையான கொரோனோ நோய் தொற்று பாதுகாப்பு கோமியோபதி மருந்து வழங்கப்பட்டது அத்துடன் முக கலசங்களும் வழங்கப்பட்டது.