நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு சாக்கு குடோனில் புகை வெளியே வந்துள்ளது. இதை பார்த்தவர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
நிலைய அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள கடைகள், நிறுவனங்களுக்கு பாதிப்பு இல்லாமல் தப்பியது.