நாகர்கோவில் கோட்டார், கம்பளம், செட்டிகுளம் பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் அதிரடி ஆய்வு செய்தார்.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமையில் கோட்டார் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நகரமைப்பு ஆய்வாளர் சந்தோஷ் குமார் உட்பட அதிகாரிகள் கம்பளம் பகுதியில் உள்ள ஓடைகளை கட்டி சீரமைக்கவும், ரயில்வே முதல் கம்பளம் வரை உள்ள ரோட்டில் தெரு விளக்குகள் இல்லாததை சரிசெய்யவும், கோட்டார் புனித சவேரியார் ஆலய சந்திப்பு முதல் செட்டிகுளம் வரை உள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் பார்க்கிங் வசதிகள் இருக்கிறதா போன்றவற்றை அதிரடியாக ஆய்வு செய்தனர்.