கன்னியாகுமரி மாவட்டத்தில் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அசுர வேகத்தில் கொரோனா தொற்று தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் தினம் தினம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று இரவு 8.42 மணி நிலவரப்படி ஆண்கள் 73, பெண்கள் 52, குழந்தைகள் 8 என்று 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இரவு 9.01 மணி நிலவரப்படி 72 வயது முதியவர், 69 வயது முதியவர், 71 வயது மூதாட்டி, 54 வயது பெண்மணி என்று 4 பேர்கள் உயிரிழந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.