ஆண்டு தோறும் உள்துறை அமைச்சகம் ஜீவன் ரக் ஷா பதக் தொடர் விருதுகளை அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், அமைச்சகம் மற்றும் இந்திய அரசின் துறையினரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.

ஜீவன் ரக் ஷா பதக் தொடர் விருதுகள் ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்காக மனிதாபிமானத்தின் சிறப்பான செயல்களுக்கு குறிப்பாக தண்ணீரில் மூழ்குவது போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு உயிரினை காப்பாற்றும் தன்மை, விபத்துக்கள், தீ சம்பவங்கள், மின்சாரம், இயற்கை பேரழிவுகள், மீட்பு நடவடிக்கைக்காக 3 பிரிவுகளாக விருதுகள் வழங்கப்பட உள்ளது.
எதற்கு என்ன விருதுகள் மீட்பவரின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் உயிரை காப்பாற்றுவதில் வெளிப்படையான தைரியத்துக்கு சர்வோட்டம் ஜீவன் ரக் ஷா பதக் விருது வழங்கப்படுகிறது. மீட்பவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் உயிரை காப்பாற்றுவதில் விரைந்து செயல்படுதலுக்கு உட்டம் ஜீவன் ரக் ஷா பதக் விருது வழங்கப்படுகிறது. மீட்பவரின் உயிருக்கு உடல் காயம் ஏற்பட்ட சூழ்நிலையில் உயிரை காப்பாற்றுவதில் விரைந்து செயல்படுதலுக்கு ஜீவன் ரக் ஷா பதக் விருது வழங்கப்படுகிறது.
தகுதி வாய்ந்த விண்ணப்பங்களுக்கு காசோலையுடன் பதக்கம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடந்த 2018 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ம் தேதிக்கு பின் செய்த சாதனை சான்றுகளுடன் விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் மாதம் 11 ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அண்ணா விளையாட்டரங்கம், நாகர்கோவில் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.






0 Comments