நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளில் உள்ளவர்களுக்கும் தெர்மா ஸ்கேன் செய்யப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று அனைவருக்கும் தெர்மா ஸ்கேன் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்ய மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் கின்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் வீடுகளுக்கு சுகாதார பணியாளர்கள் சென்று தெர்மா ஸ்கேன் மூலம் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள் தலைமையில் வடசேரி பகுதிகளில் உள்ள வீடுகளில் தெர்மா ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்தனர்.







0 Comments