கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் பள்ளிகளில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
அதன்படி ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 110 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் இருந்து செயல்பட உள்ளனர்.

நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலர் கின்சால் தலைமையில் அதிகாரிகள் கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர். டாக்டர்கள் குழு, செவிலியர்கள், மாநகராட்சி தூய்மை பணியாளர்களும் தயார்படுத்தப்பட்டனர்.