திருவட்டார் காங்கரையில் செயல்பட்டு வரும் ஆண்கள் ஜிம் ஒன்றில் விளையாட வரும் ஒரு வாலிபருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் அந்த ஜிம் தற்போது மூடி இயங்க தடை செய்யப்பட்டது.

திருவட்டார் பஸ் நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவரின் மகனும் விளையாட சென்றாராம். இதனால், அவனுக்கு கடந்த வாரம் சளி பரிசோதனை எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர். அதில், கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்ததை அடுத்து அவரை சிகிச்சைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த ஜிம் பகுதி, வங்கி வளாகம் பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அருகில் உள்ளவர்கள் ஹோட்டலுக்கு வந்து செல்லும் பலருக்கு பரிசோதனைக்கு சளி மாதிரி எடுத்து அனுப்பி உள்ளனர். இது போல் அரன்மன்னம் பகுதியிலும் முதியவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் அந்த பகுதியும் தடை செய்யப்பட்டது. இதனால் சுகாதார துறையினர் சுற்று வட்டார பகுதியில் கிருமிநாசினி தெளித்து பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இது இந்த சுற்றுவட்டார பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.






0 Comments