அழகிய மண்டபத்தில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இடைவெளியுடன் வாழ்ந்து வரும் மக்கள் பயன்படுத்தி உள்ள மின்சார கட்டண உயர்வை சரி செய்யக்கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு காட்டாத்துறை பஞ்., தலைவர் இசையாஸ் தலைமை வகித்தார். கண்ணனூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோண் , ஜாண் பெலிக்ஸ் முன்னிலையில் வட்டாரத் தலைவர் ஜெகன் ராஜ் , போஸ்டின் ஞானஜெகன் பேசினார்,,ஜெஸ்ஸி, பாத்திமா, ஜோஸ் , ஆன்றோ, வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் சேகர் கலந்து கொண்டனர்.