கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் உள்நாட்டு மீனவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில் மீன் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்நாட்டு மீனவர்களுக்கு என தனி அலுவலர்கள் நியமித்து 2013 வரை செயல்பட்டது போல் செயல்படுத்திட கேட்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் அந்தோணி தலைமை வகித்தார். தாமஸ் துவக்கி வைத்தார். ராஜன், ஜெயராஜ், காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.