நெசவாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகைக்கு 2 நாட்களுக்குள் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை மூலம் கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவு மேற்கொள்ளும் நெசவாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகை ரூ. 2000 வழங்க ஆணை வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நெசவாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெறாத 200 யூனிட் விலையில்லா மின்சாரம் பயன் பெற்று வரும் நெசவாளர்கள் விண்ணப்ப மனு, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், தமிழ்நாடு மின்சார வாரிய அட்டை மற்றும் கடைசியாக செலுத்திய மின் கட்டண ரசீது நகலுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடம் 2 ம் தளம், நாகர்கோவில் முகவரியில் அமைந்துள்ள உதவி இயக்குனர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அலுவலகத்திலோ அல்லது அருகில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலோ விண்ணப்பங்களை 2 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 Comments