தூத்தூர் புனித யூதா கல்லூரியில் தனிமை படுத்தப்பட்டிருந்த குமரி மாவட்ட மீனவர்களுக்கு மீண்டும் சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஈரான் நாட்டில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வந்த 535 குமரி மீனவர்கள் முகாம்களில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் தங்க வைக்க குமரி மாவட்டத்தில் ஆறு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவர்களில் 39 பேர் தூத்தூர் புனித யூதா கல்லூரியில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் சுகாதார துறை சார்பில் சளி மாதிரி எடுத்து பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் ஏழு நாட்கள் கழித்து மீண்டும் அவர்களுக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் யாருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள், மற்றவர்கள் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்து பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






0 Comments