தக்கலை யூனியன் பஞ்., அலுவலகம் முன் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் உள்ள யூனியன் பஞ்., அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தக்கலை ஒன்றியத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு சங்க மாவட்ட இணை செயலாளர் இராமசந்திரன் பொது செயலாளர் தங்கம், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு அரசு சத்துணவு சமைத்து வழங்காமல் சத்துணவுக்கான மானியத்தை பெற்றோர் வங்கி கணக்கில் செலுத்துவதை அரசு கைவிடுதல், சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து ஏற்கனவே சூடான சத்துணவு வழங்கியது போல் தொடர்ந்து சத்துணவு வழங்க ஊழியர்கள் தயாராக உள்ளனர் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்தல். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தி வழங்கியது போல், சத்துணவு ஊழியர்களுக்கு 58 லிருந்நு 60 ஆக உயர்த்தி வழங்குதல் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.






0 Comments