நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளை கமிஷனர் ஆய்வு செய்தார். நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இருளப்பபுரம் சந்திப்பு, வேதநகர் மீன் சந்தை, என்ஜிஓ காலனி ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி கமிஷனர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார்.
வட்டவிளை பகுதியில் அமைந்துள்ள நுண்உர செயலாக்க மையங்களையும் ஆய்வு செய்தார். சுகாதார ஆய்வாளர் மாதேவன் பிள்ளை மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் இருந்தனர்.