கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, முள்ளூர் துறையை சேர்ந்த மீனவர் அந்தோணி, மார்த்தாண்டம் துறையை சேர்ந்த மீனவர் சிபு ஆகியோர்கள் மீன்பிடி தொழிலுக்கு சென்று துறைமுகத்திற்குள் வரும் போது கட்டுக்கடங்காத கடல் அலைகளால் மணல்மேடுகளில் மோதி உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் குடும்பங்களை பாதுகாத்திட தலா 25 லட்சம் வீதம் வழங்குவதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 21 ம் தேதி கோவளத்தை சேர்ந்த அந்தோணி என்பவர் இயற்கை சீற்றத்தின் காரணமாக அரசு அலையில் சிக்கி மீன்பிடிக்கலனும் சிதலடைந்த தூண்டில் வளைவில் மோதி உயிரிழந்துள்ள அவரது 3 பெண் குழந்தைகள் எவ்வித உதவியும் இல்லாமல் தனிமைப்பட்டு உள்ளனர். தந்தையை இழந்த 3 பெண்களுக்கும் ரூ. 25 லட்சம் நிவாரணமும் அவர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.






0 Comments