நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது மாவட்டத்தில் உள்ள பல போலீஸ் ஸ்டேஷனில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவுப்படி மாநகர் நல அலுவலர் கின்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர்.

நாகர்கோவிலில் உள்ள பிரபல நகைக்கடையில் உள்ள ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.