கன்னியாகுமரி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. கடந்த 2019 ம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 5068 க்கும் அதிகமான ஆசிரியர்
அரசு ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளும், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது அதை ரத்து செய்தல் உட்பட கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழக முதல்வருக்கு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மற்றும்,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மூலமாக கோரிக்கை மனு கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன்,கனகராஜ், சிவசிறிரமேஷ்,சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் வழங்கப்பட்டது.

மாநில செயலாளர்கள் ராஜ் குமார், கிறிஸ்டோபர், மாவட்டச்செயலாளர் விஜயகுமார்,மூட்டா கலைவாணன், மாவட்ட செயலாளர் வினித்,பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில நிர்வாகி வேலவன், மாவட்ட செயலாளர் விமல் சங்கர்,டொமினிக் பிரிட்டோ, கல்வி மாவட்டத் தலைவர் ஜார்ஜ், மாநில துணைப்பொதுச்செயலாளர் எட்வின் பிரகாஷ், மாவட்டப்பொருளாளர் ராபர்ட்பாபு, மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன்,மாவட்ட பொருளாளர் சுமஹாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.