மாதவலாயம் பஞ்., பகுதியில் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாதவலாயம் பஞ்., அனைத்து பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி கிளைதலைவர் சலீம் தலைமையில் நடந்தது.
மாவட்ட தலைவர் ஜிஸ்திமுகம்மது பஞ்., தலைவர் ரெஜினாராஜேஸ் ஆகியோர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். மேலும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பற்றி கருத்து கூறப்பட்டது.