கன்னியாகுமரி மாவட்டம் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தமிழக அரசு 10 ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவ, மாணவிகள் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் வருகை பதிவுகளின் அடிப்படையில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்ச்சியை அரசு வெளியிட்டு உள்ளது.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் ஆகிய 4 கல்வி மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 23 ஆயிரத்து 871 பேரில் 11 ஆயிரத்து 850 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆயிரத்து 21 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது.






0 Comments