நாகர்கோவில் வடசேரியில் ஹோட்டல் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள், மருந்து கடை ஊழியர்கள், நகைக்கடை ஊழியர்கள் என்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நாகர்கோவில் வடசேரி காமாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள ஒரு ஹோட்டல் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவுப்படி மாநகர் நல அலுவலர் கின்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர்.






0 Comments