தக்கலையில் குமரி மாவட்ட சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தக்கலையில் நடந்த நிகழ்ச்சிக்கு எஸ் எம் ஐ நகரச் செயலாளர் முகமது சர்பாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஃபைரோஸ் காஜா தமுமுக நகரத்தலைவர் நாசர், செயலாளர் பீர் முகைதீன், பொருளாளர் பீர் முகமது, மமக கிளை செயலாளர் பீர் முகமது, நகர துணை செயலாளர் ஷாகுல் ஹமீது, மாவட்ட தமுமுக துணைத்தலைவர் சித்தீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ் எம் ஜ மாநில துணை செயலாளர் சுல்பிக்கர் தமுமுக மாவட்ட பொருளாளர் நவாஸ்கான், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அல் அமீன் ஆகியோர் கபசுரக் குடிநீர் கொடுத்து நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.
மமக மாவட்ட செயலாளர் முகமது உவைஸ் பொது மக்களிடம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சார உரை செய்தார். தமுமுக குமரி மாவட்டம் சார்பாக கொரோனா தொற்றால் உயிரிழந்த அனைத்து மதத்தையும் சார்ந்த 15 பேரின் உடல்களை அடக்கம் செய்ததாகவும் தொடர்ந்து தமுமுக, கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க தமுமுக தொடர்ந்து பணி செய்து வருகிறது என்றார். பத்மநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட சந்தை பகுதி, மேட்டு கடை போன்ற அனைத்து வார்டுகளிலும் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
பத்மநாதபுரம் நகராட்சி சுகாதார மேற்ப்பார்வையாளர் மோகன் பத்மநாதபுரம் நாடக கலைக்குழு அருள் தக்கலை திருவிதாங்கோடு தேங்காய் பட்டணம் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






0 Comments